புதுவை தேவர் பேரவை
தோற்றமும் வளர்ச்சியும்

1982 ஆம் ஆண்டில் நெய்வேலி NLCயின் பொது மேலாளராக இருந்த நமது உறவினர் தெய்வத்திரு. மேஜர். T.S. வாசகம் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் புதுவையில் நமது நிறுவனத் தலைவர் தெய்வத்திரு மூக்கையா தேவர் அவர்களை சந்தித்து புதுவையிலும் நம் சமூகத்திற்கான ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை, நமது உறவினர்கள் K. உத்தமன் -N. பிச்சுமணி, ஆகிய இருவரும் முன்வைத்தனர். அதைக்கேட்டவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் அதற்கு சம்மதித்ததோடு, அதற்கான முகவரியையும் தந்து, பேரவை அமைய அனைத்து உதவிகளையும் செய்தார்கள். 1982 ஆம் ஆண்டு மே மாதம் ‘பசும்பொன் நுண்கலை மன்றம்’ என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, 1987 ஆம் ஆண்டு ‘புதுவை தேவர் பேரவை’ என்று பெயர் மாற்றப்பட்டு, இன்றுவரை சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகிறது
1980 முதல் 90 காலகட்டங்களில் புதுவையில் நமக்கான அங்கீகாரம் இருக்கவில்லை. நமக்கான சாதிச் சான்றிதழில் “புலம்பெயர்ந்தவர்” (MIGRANT) என்றே குறிப்பிட்டு தந்தார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகே நமக்கான அங்கீகாரம் கிடைத்தது. தேவர், கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய அனைத்தும் ‘இதர பிற்படுத்தப்பட்டோர்’ பட்டியலில் சேர்த்து புதுவை அரசாங்கம் அரசிதழ் வெளியிட்டது. இதற்குப் பிறகு நமது சமூகத்தினர் கல்வி வேலைவாய்ப்பில் இடம் பிடித்து, இன்று பலர் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும் உள்ளனர். மேலும் பலர் தொழில் முனைவர்களாகவும் உள்ளனர்.
இந்த வளர்ச்சி தொடர்ந்திடவும் மேலும் உயர்ந்திடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.
தலைவர்கள்








நிறுவனர்

தெய்வத்திரு.உ.மூக்கையாத் தேவர்
தெய்வத்திரு. உ. மூக்கையா தேவர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 1996 ஆவது ஆண்டு வாக்கில் கட்டிடபணி துரைசார்ந்த ஒப்பந்தராக புதுவைக்கு வந்தார்கள், மத்திய அரசு, மாநில அரசு சார்ந்த கட்டிட ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு அவற்றில் முதல்நிலை ஒப்பந்தராக திகழ்ந்தார். அவரது ஒப்பந்தத்தில் ஒறுவான மிக முக்கியமான கட்டிடங்கள், புதுவை ஜிப்மர் (OPT) வளாகம், புதுவை பொறியியல் கல்லூரி அலுவலக வளாகம், புதுவை பல்கலைகழக வளாகம், காந்திவீதி அமுதசுரபி கட்டிடம், புதுவை DAT கட்டிடம் போன்ற பல அரசு கட்டிடங்களை உறுவாக்கி மிகப்பெரிய உச்சத்தை அடைந்து புதுவைக்கு பெருமை சேர்க்கும் வகையிலே திகழ்ந்தார்.
தனது பணியிலே ஓய்வில்லா காலகட்டத்திலும் 1976 ஆம் ஆண்டுகளில் நமது சமூதாய உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த காலகட்டத்தில் அவர்களை ஒன்றிணைக்கும் வகையிலே 1982 ஆம் ஆண்டுகளில் பசும்பொன நுன்கலை மன்றம் என்ற அமைப்பை நிறுவினார். ஆதன் தொடர்ச்சியாக 1987 ஆம் ஆண்டு மேற்படி அமைப்பை கலைத்துவிட்டு “புதுவை தேவர் பேரவை” என்கிற சமூக அமைப்பை நிறுவனார். அன்றுமுதல் நமது முக்குலத்து சமூதாயத்தை ஒன்றிணைக்கும் பணியினை முனைப்புடன் செயல்பட்டார்கள். புதுவை முக்குலத்தோர் மக்களுக்கு புதுவை அரசு வழங்கும் கல்வி மற்றும் அரசு பணிகளிலே இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பதை வளியுறுத்தி புதுவை சமூகநீதி பேரவையுடன் இணைந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ந்திட பல போராட்டங்களை நடத்தியதின் விளைவாக புதுவை அரசு முக்குலத்தோர் சமூதாயத்தை (OBC) இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை வழங்கிளது. மேலும் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களுக்கு புதுவையில் சிலை அமைப்பதற்கு அரசுக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து நமது மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி கல்வியில் மேன்பட துணைநின்றார் மற்றும் தனது தந்தையாரின் பெயரில் ஆண்டுதோறும் கல்வி விருதுகளையும் வழங்கினார்.
புதுவை தேவர் பேரவைக்கு சொந்த இடம் வாங்கிட வேண்டும் என்ற பெரும் முயற்சி மேற்கொண்ட சமயத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
புதுவை தேவர் பேரவை என்கிற அமைப்பை நிறுவி அதன் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பேற்று சீறும் சிறப்போடும் வழி நடத்தி பெருமை சேர்த்தவர். முதன்முதலில் புதுச்சேரியில் நமது தேவர் சமூதாயத்ழைத இடையானப்படுத்தியது மட்டுமல்லாது இன்று வரை முக்கலத்தோர் சமூதாயத்தின் முகவரியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
முன்னால் தலைவர்

தெய்வத்திரு. கணேஷ் மூக்கையா
தெய்வத்திரு. கணேஷ் மூக்கையா அவர்கள்,
புதுவை தேவர் பேரவையின் நிறுவனர் தெய்வத்திரு. உ.மூக்கையாத்தேவர் அவர்களின் மூத்த புதல்வர் திரு. கணேஷ் டூக்கையா அவர்கள் புதுவையில் பிறந்து கல்வி மற்றும் கல்லூரி படிப்பால் முதுநிலை (கட்டிட) பொறியாளர் பட்டம் பெற்றவர். 1993 ஆண்டுகளில் தந்தையார் உடன் இணைந்து கட்டிடத்துறையில் மிகச்சிறப்பாக செயலாற்றினார். தனது தந்தையாரின் மறைவிற்கு பிறகு தனது தொழிலை “மூக்கையா ரூ சன்ஸ்” என்ற நிறுவனமாக உறுவாக்கி சிறப்புடன் செயலாற்றினார். தந்தையாரின் மறைவிற்கு பிறகு தந்தை வகித்து வந்த புதுவை தேவர் பேரவையின் தலைவர் பொறுப்பினை பேரவை நிர்வாகிகளின் வேண்டுகோலுக்கு இணங்க 2007 ஆம் ஆண்டு பேரவையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தந்தையாரைப் போலவே தானும் சிறப்பாக செயல்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டிலே உறுதியாக இருந்தார். தந்தையாரைப் போலவே அவர் செய்து வந்த சேவைப் பணிகளை தொடந்து செயல்படுத்தினார். நமது பேரவை உறுப்பினரின் மாணவருக்கு மேற்படிப்பிற்கு அயல்நாட்டு செல்வதற்கான உதவிகளை செய்தார். மற்றும் நமது உறுப்பினர் அவர்களின் மகள் திருமணத்திற்கு நிதி உதவி செய்தார். ஒவ்வொரு ஆண்டு முப்பெரும் விழதவில் தனது தந்தையார் பெயரில் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்து வருகிறார். மேலும் தந்தையாரின் நினைவு நாள் அன்று சென்னை அப்போலோ மருத்துவமனை குழுவை குதுவைக்கு அழைத்து வந்து மருத்துவ முகாம் அமைத்து நமது உறவினர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். பசும்பொன் தேவர் திருமகனுக்கு புதுவையில் இடம் வாங்கி கோவில் கட்டவேண்டும் என்கிற முயற்சிகள் மேற்கொண்டு வந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். திரு. கணேஷ் மூக்கையா அவர்கள் தனது 37ஆம் வயதில் பேரவைத் தலைவராக பொருப்பேற்று கடந்த 16 ஆண்டுக் மிகச்சிறப்பாக பேரவையை வழிநடத்தியவர் முன்னால் தலைவர்.
தலைவர்

திரு. தனபாலன்
வணக்கம். நான் தொழில் நிமித்தமாக 1992 ஆம் ஆண்டு வாக்கில் புதுவைக்கு வந்தேன். தொழில் வாய்ப்புகள் நிலையாக அமைந்ததால் புதுச்சேரியில் குடியமர்ந்தேன். 1998 ஆம் ஆண்டுகளில் புதுவை தேவர் பேரவையின் உறுப்பினராக பங்குபெற்றேன். தன்னலமற்ற தலைமையும் அற்பணிப்புக் கொண்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் கண்டு ஈர்க்கப்பட்டேன். அன்று முதல் என்னால் இயன்ற அளவு பேரவையின் செயல்பாட்டுகளுக்கு பங்காற்றினேன். கடந்த 15 ஆண்டுகளாக செயற்குழு உறுப்பினராக சேவையாற்றி வருகிறேன்.
புதுவை தேவர் பேரவையின் தலைவர் திரு. கணேஷ் மூக்கையா அவர்களின் மறைவிற்கு பிறகு கடந்த மே மாதம் 2025 அன்று நடைபெற்ற சூட்டத்தில் என்னை தலைவராக தேர்வு செய்தது சற்றும் நான் எதிர்பாராத நிகழ்வாக அமைந்தது. பேரவையின் தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நான் நமது முக்குலத்தோர் மக்களின் ஒற்றுமையை வலுசேர்க்கவும், முன்னோடிகளின் எண்ணப்படி பேரவைக்கு சொந்தமான இடம் வாங்கி அதை மக்கள் பயன்படும் வகையிலே உறுவாக்குவதற்கும், நமது சமூக பிள்ளைகளின் கல்வி மற்றும் உயர்கல்வி பெறுவதற்கான உதவிகள் செய்வது, பாகுபாடற்ற உறவையும் நட்மையும் மேன்படுத்தவும் நமது செயற்குழுவின் ஆலோசனைகளுக்கு இணங்க நமது தேவர் பேரவையை ஆரோக்கியமான நிலையினை நிறந்தரமான நிலையை அடைந்தி என்னால் இயன்றவரை கடமையாற்றவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது இலக்கினை அடைவோமாக.
கௌரவ தலைவர்

திரு. ரெத்தினசாமி முருகேசன்
அவர்கள் தொழில் வெற்றியும், சமூகப் பணியும் இணைத்துச் செயல்படும் ஒருவர்.இவர் தற்போது எவர்சேஃப் அகாடமி (Eversafe Academy), சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (Managing Director) பணியாற்றி வருகிறார்.
இவர் தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முப்பரிமாணக் கட்டிடக்கலை (Civil Engineering) இல் பட்டம் பெற்று, அதன் பின்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS)-இல் சூழல் பொறியியல் (Environmental Engineering) துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
2008ஆம் ஆண்டு தனது முதல் நிறுவனத்தை தொடங்கி, வெகு சில ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் தொழில்துறை விரிவாக்கத்தை மேற்கொண்டார். தற்போது, RM குழும நிறுவனம் (RM Group of Companies) என்ற பெயரில் 8 வெவ்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்
சிங்கப்பூர் நிறுவனங்கள்



இந்திய நிறுவனங்கள்






- தனது அதிக வேலைப்பளுவான தொழில் வாழ்க்கையிலும், திரு. முருகேசன் அவர்கள் யோகா மற்றும் தியான பயிற்சிகள் கற்றுக் கொண்டு, அதை இலவசமாக சமூகத்திற்குப் பகிர்ந்து வருகிறார்.
அவரது வழிகாட்டலின் கீழ் இலவச யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
RM Trust மூலமாக சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகிறார்:
- ரத்ததான முகாம்
- இலவச மருத்துவ பரிசோதனை
- கல்வி உபகரண உதவி
- ஏழை குடும்பங்களுக்கு உணவு, மளிகை உதவி
- ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
- முதியோர் நலத்திட்டங்கள்
- அனாதை இல்லங்களுக்கு உதவி
- மருத்துவச் செலவுகளுக்கான நிதியுதவி
- வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்
- தற்போது, புதுவை தேவர் பேரவை வளர்ச்சிக்காக திரு. ரதினசாமி முருகேசன் அவர்கள் தனது நேரத்தையும், ஆதரவையும் முழுமையாக வழங்க முனைந்துள்ளார். சமூக நலனுக்கான நோக்கத்துடன், பல்வேறு முக்கியத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.
திட்டங்களை காண Click செய்யவும்
துணைத் தலைவர்

திரு. சீ லட்சுமணத் தேவர்
புதுவை தேவர் பேரவையின் வளர்ச்சியும், வனப்பும்.
உலகமெங்கும் பரவியுள்ள நமது தேவரின உறவுகள் அனைவருக்கும். முதற்கண் வணக்கம்! புதுவை தேவர் பேரவையின் வளர்ச்சி அமைதியாக ஆரவாரமின்றி தெளிவான செயல்பாட்டால் துள்ளல் நடைபோட்டு வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்ப காலத்தில், அதாவது 1982ல் கடலூர் தேவர்பேரவை நமக்கு வழிகாட்டியது. வழிகாட்டிய அன்பு உறவுகளுக்கு நன்றிகள்!!
பேரவையின் நோக்கம்: பள்ளி, கல்லூர்களில் பயிலும் போது மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 10வது, 12வது படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஆண்டு தோறும் ஊக்கப் பரிசுகள் வழங்கிவருகிறோம். கல்வி மட்டுமின்றி, அவர்களிடமுள்ள தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதயாக ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம். உறவினர்கள் வீட்டில் நடக்கும் விழாக்களில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தல் மற்றும் துக்க நிகழ்வுகளில் அவர்களுக்கு துணையாக நின்று செயல்பட்டுவருகிறோம்.
ஆண்டுதோரும், தேவர் ஜெயந்தி, புதுவைதேவர் பேரவையின் ஆண்டுவிழா மற்றும் கல்விவிருது வழங்கம் விழாவாகிய மும்பெரும் விழா’ கொண்டாடி குரும்பத்தினர் அனைவரும் கலந்து சிறப்பித்து விரூகிறோம். இந்த முப்பெரும் விழாக்களில் புதுவையின் முதல்வர், மந்திரிகள், சயாநாயகர் உள்ளிட்டோரும், திரையுலக பிரபலங்கள். நடிகர் ராஜேஷ், S.S.சந்திரன், செந்தில், இலட்சியநடிகர் SS ராஜேந்திரன், நடிகை மனோரமா, நடிகர் கார்த்திக் முத்துராமன், வால நாமமூரத்தி மற்றும் பலரையும் அழைத்து பாராட்டியுள்ளோம்.
நமது சமுதாய மக்களின் மன்னேற்றத்திற்கு தேவையான எல்லா விதமான உதவிகளையும் செய்துவருகிறோம். இந்தப் பணி தொடர்ந்திட அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி / வணக்கம்!!
ஆலோசகர்

திரு.பிச்சுமணி
1982 ஆம் ஆண்டில் நெய்வேலி NLCயின் பொது மேலாளராக இருந்த நமது உறவினர் தெய்வத்திரு. மேஜர். T.S. வாசகம் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் புதுவையில் நமது நிறுவனத் தலைவர் தெய்வத்திரு மூக்கையா தேவர் அவர்களை சந்தித்து புதுவையிலும் நம் சமூகத்திற்கான ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை, நமது உறவினர்கள் K. உத்தமன் -N. பிச்சுமணி, ஆகிய இருவரும் முன்வைத்தனர். அதைக்கேட்டவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் அதற்கு சம்மதித்ததோடு, அதற்கான முகவரியையும் தந்து, பேரவை அமைய அனைத்து உதவிகளையும் செய்தார்கள். 1982 ஆம் ஆண்டு மே மாதம் ‘பசும்பொன் நுண்கலை மன்றம்’ என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, 1987 ஆம் ஆண்டு ‘புதுவை தேவர் பேரவை’ என்று பெயர் மாற்றப்பட்டு, இன்றுவரை சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகிறது
1980 முதல் 90 காலகட்டங்களில் புதுவையில் நமக்கான அங்கீகாரம் இருக்கவில்லை. நமக்கான சாதிச் சான்றிதழில் “புலம்பெயர்ந்தவர்” (MIGRANT) என்றே குறிப்பிட்டு தந்தார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகே நமக்கான அங்கீகாரம் கிடைத்தது. தேவர், கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய அனைத்தும் ‘இதர பிற்படுத்தப்பட்டோர்’ பட்டியலில் சேர்த்து புதுவை அரசாங்கம் அரசிதழ் வெளியிட்டது. இதற்குப் பிறகு நமது சமூகத்தினர் கல்வி வேலைவாய்ப்பில் இடம் பிடித்து, இன்று பலர் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும் உள்ளனர். மேலும் பலர் தொழில் முனைவர்களாகவும் உள்ளனர்.
இந்த வளர்ச்சி தொடர்ந்திடவும் மேலும் உயர்ந்திடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.
செயலாளர்

திரு. முருகன்
வணக்கம். புதுவை தேவர் பேரவையில் நான் 1994 ஆண்டிலே பேரவையின் உறுப்பினராக அங்கம்வகித்தேன். அதனை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு செயற்குழு உறுப்பிகராகவும் துணைச் செயலாளராகவும் பணியாற்றும் வாய்பு வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முதல் 2008 வரை நான்கு செயலாளர்களுக்கு துணைச் செயலாளராக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளில் செயலாளராகவும் சேவைப்பணியாற்றி வருகிறேன்.
கடந்த 30 ஆண்டுகளாக நமது பேரவை உறவினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து நலனை அறிந்து கொள்வது, பேரவை மூலம் வழங்கப்படும் தினக்காலண்டர் வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலைநிகழ்ச்சி அழைப்பிதழ் வழங்குவது மற்றும் முப்பெரும்விழா அழைப்பிதழ் வழங்குவது, உறுப்பினர்களின் சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்கள் உடன் இருந்து இறுதிவரை இயன்ற உதவிகள் செய்வது போன்ற நமது சமூக சேவைகளை தன்னலமற்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்.
நமது முக்குலத்தோர் சமூதாயம் (கள்ளர், மறவர், அகமுடையார் ) மூவரும் தேவரினம் என்கிற ஒற்றைபுள்ளியில் இணைந்து வாழ்வதற்கான நிலைப்பாட்டினை உறுவாக்க வேண்டும். பாகுபாடற்ற ஒறவுகளை நிலைநாட்ட வேண்டும். இனிவரும் நமது இளைய சமுதாயத்திற்கு ஒன்றுபட்ட ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஏற்படுத்த வேண்டும். நமது பேவை உறவினர்களின் நீணடநாள் கோரிக்கையாக இருப்பது சொந்தமாக இடம் வாங்கி அந்த இடத்திலே நமது சுபகாரியங்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்திட வேண்டும். நமது அமைப்பின் பெயரிலே மருத்து அவசர ஊர்தி வாங்கி இயக்க வேண்டும் என்கிற செயல்திட்டங்கள் நாம் அடையும் நிலையை உறுவாக்கிவிட்டால் நமது சமூதாயத்தின் ஒற்றுமையும் உயர்வும் என்றென்றும் நமது இலக்காகட்டும். நன்றி
பொருளாளர்

திரு. M.R.ராஜசேகர்
புதுவை மாநிலத்திற்கு தொழில் அலுவல் வாணியம் நிமித்தமாகவந்த நம்முக்குலத்து மக்கள் இம்மண்னின் மக்களோடு மக்களாக கலந்து எவ்வித வேறுபாடுமின்றி பததிவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைத்து புதுவை தேவர் பேரவை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நம்சமுதாய முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுப்பட்டுவருகிறோம். இப்பேரவை 43 ஆண்டுகளாக தொய்வின்றி அற்புதமாக செயல்பட்டு வருவதற்குக் காரணம், தலைவர் மற்றும் நிர்வாகக்குழ உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு உங்களை அழைக்கவேண்டி உங்கள் இல்லம் தேடிவரும்போது இன்முகத்துடன் வரவேற்று, பொருள் உதவி வழங்கி, விழா பொறுப்புகளில் பங்கேற்று சிறப்பித்துவரும் அனைத்து உறவினக்களுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். அதேபோல் கல்விலிருது வழங்கிடவும், கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிட பொருள் உதவி செய்பவர்களுக்கும் பேரவை சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி ! வணக்கம்!!